Posts tagged ‘மனப்பக்குவம் ‘




உணர்வுகள்

முழுதாக கணினியில் இருப்பதால் மனிதம் மறத்துவிட்டது. மனித உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. மனிதர்கள் இயந்திரங்களைப் போல முழுமையாகவும், உண்மையாகவும் இல்லாததால் வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. உன்னிடம் நான் கேட்பது ஒன்றைத்தான். உன்னை நான் இயந்திரமாக நினைக்கப்போவது இல்லை. உன்னிடம் உள்ள குறைகள் எனக்கு பெரிதல்ல. குறை இல்லாத மனிதன் இல்லை. என்னை நீ சரியாக புரிந்துகொள்ள உனக்கு மனப்பக்குவம் தேவை. உனக்கு இருக்கும் என நம்புகிறேன். நான் உன் பெற்றோர்களையோ என் பெற்றோர்களையோ வேறுபடுத்தி பார்ப்பது இல்லை. என் காதலும் சராசரி காதல் இல்லை. வருவதை எதிர்கொள்ளும் துணிவையும் ஆற்றலையும் உன்னிடம் எதிர்பார்க்கிறேன். வாழ்க்கை என்றும் நாம் நினைப்பதை போல அமைந்துவிடுவது இல்லை. எதிர்பாராத திருப்பங்கள், மாற்றங்கள் நிறைந்தது. இன்பமும் துன்பமும் சமச்சீராக இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும். இன்பம் மட்டுமே இருந்துவிட்டால், பிரிவு என்பது மிகவும் வேதனையாக இருக்கும். துன்பம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும். நம்முடைய வாழ்க்கை நிச்சயமாக இன்பமும் துன்பமும் நிறைந்த  ஒரு அட்வன்ச்சர் பயணமாக இருக்கும். பிரச்சனைகள் எனக்கு மிக பிடித்த விசயம். அது கற்று கொடுக்கும் பாடங்கள் யாராலும் கற்றுக்கொடுக்க இயலாது. வாழ்க்கை என்பதே ஒரு கல்விதான். நாமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொன்றைக் கற்றுக்கொள்கிறோம். வாழ்க்கையின் எந்த பகுதியிலும் உணர்ச்சிகளுக்கு அடிமை ஆகிவிடக்கூடாது.

Add a comment நவம்பர்4, 2009

குறிச்சொற்கள்

அட்வென்ச்சர் அப்பா அழகு உணர்வுகள் எக்ஸாம் காதலி காதல் திருப்பங்கள் தோழி பாசம் பொண்ணு போட்டோ மனப்பக்குவம் ரிசல்ட் வாழ்க்கை விருப்பம் விழிகள்
 
Follow

Get every new post delivered to your Inbox.