Posts tagged ‘தோழி ‘
முதல் வார்த்தை!
ஹலோ காதலியே,
நீ மனைவியாக இருந்தாலும் என் காதலி தான். என்னைப் பொருத்தவரையில் இந்த சமுதாயத்திற்கு தேவையான ஒரு அடையாளம் தான் மனைவி என்பது. எனக்கு என்றும் நீ காதலி தான். காதலி மட்டும் அல்ல தோழியும் நீ தான். உன்னை சமமாக பார்க்க வேண்டும் என்றால் தோழியாக இருப்பது நல்லது. வாழ்க்கை என்பது எனக்கு ஒரு சதுரங்க ஆட்டம். ஆடிக்கொண்டிருக்கிறேன். வெற்றி என்பதை விட தொடர் வெற்றி என்பதில்தான் மகிழ்ச்சி. நீயும் துணை இருப்பாய் என நம்புகிறேன். என்றாவது ஒரு நாள் உனக்கு என்னை சரியாக புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படலாம் . அதற்காக நான் எடுக்கும் ப்ரிகாசன் இந்த தளம். ஒரு நாள் நிச்சயம் இந்த தளத்திற்கு வருவாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
Add a comment நவம்பர்4, 2009