Posts tagged ‘எக்ஸாம் ‘
முதல் பார்வை
எல்லோருக்கும் வாழ்க்கையில முதன் முதலா செய்ரது மறக்கவே மறக்காது. முதல் பார்வை, முதல் காதல், முதல் புன்னகை எல்லாமே. சொல்ல கொஞ்சம் கூச்சமாதான் இருக்கு. என்னதான் ஆம்பிளையா இருந்தாலும் வீட்டுல கல்யாண பேச்சு எடுக்கும்போது நான் என்ன எதிர்பார்க்கிறேனு சரியா சொல்லாம நீங்களே ஒரு நல்ல பொண்ணா பாருங்க அப்படினு சொல்றது தான் நம்ம வீட்டு கலாச்சாரம். பெத்தவங்க முன்னாடி இன்ட்ரஸ்ட் இல்லாதமாதிரி நடந்துகிட்டு ( நடிச்சிட்டு) அவங்க எப்படா அந்த பொண்ணு போட்டோ தருவாங்கனு எதிர்பாக்குற அந்த படபடப்பு எக்ஸாம் ரிசல்ட் பார்க்கும்போது கூட இருக்காது. பேசி முடிச்சுட்டாங்களா இல்லையானு தெரிஞ்சுக்க சும்மா அம்மாகிட்டே ஏதாச்சும் பேச்சு குடுத்து விசயத்த வாங்குறது. அம்மாவுக்கும் தெரியும் நம்ம புள்ள என்னிக்கும் இல்லாம நம்மகிட்டே இவ்ளோ நேரம் பேசுரானேனு. இருந்தாலும் அது ஒரு தனி சுகம். மொதல்ல பெத்தவங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையானு தெரிஞ்சுக்க எல்லாருக்குமே ஆர்வம் இருக்கும். கன்ஃபார்ம் ஆனப்பறம் தான் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்.
Add a comment நவம்பர்6, 2009