Posts tagged ‘அழகு ‘
காதல்
கண்டதும் காதல் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. என் காதலுக்கு கண்கள் உண்டு. அவை உன்னிடம் உள்ள நல்ல குணங்களை பார்க்கும். உன் அழகை மட்டும் அல்ல. அழகு என்பது நிலையானது அல்ல. என் காதல் நிலையானது. உனக்கு 60 வயது ஆனாலும் கூட என் காதல் அதிகமாகுமே தவிர குறையாது. என் காதல் நேர்மையானது. என் கண்கள் உன் விழிகளை மட்டுமே பார்க்கும். பெருமைக்காக சொல்லவில்லை. 25 வருட விரதத்திற்கு பிறகு என் கண்கள் பார்க்கும் முதல் விழிகள் உன் விழிகள். ஹூம்.. தெரியல… என்னை அறியாமலே கவிதை உன்னை நினைச்சாலே. சாரி.. இதும் பர்ப்பசா எழுதல. மொத்ததுல நான் என்ன சொல்ல வரேனா எல்லாரும் சொல்ரதுதான் நான் வித்தியாசமான ஆளு. என்னோட பார்வைகள், அனுகுமுறைகள் எல்லாமே. கோபம் நியாயமாக இருக்கும். பொருமையான ஆளுதான் ஆனா கொஞ்சம் கார சாரமான ஆளு. போக போக உனக்கு தெரியும். நான் சொல்லி தெரிய தேவை இருக்காது. எனக்கு என் மேல முழு நம்பிக்கை உண்டு. என் செலக்கசன் வீணா போகாது. என்னோட கணிப்பு தவறாது. பாக்கலாம்…
Add a comment நவம்பர்6, 2009